Vasu pt desk
இந்தியா

மலைப் பாதையில் நடனமாடியபடி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த பரதக் கலைஞர்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பரதக் கலைஞர் ஒருவர் பரதம் ஆடியபடியே மலைப் பாதையில் ஏறியுள்ளார்.

webteam

நரசராவ் போட்டையைச் சேர்ந்த கிருஷ்ண வாசு என்ற பரதநாட்டியக் கலைஞர், திருப்பதிக்கு பரதமாடியபடியே மலையேறி வருவதாக வேண்டிக் கொண்டுள்ளார். அதன்படி ஸ்ரீவாரி மலைப் பாதையில் தியாகராஜ கீர்த்தனைகளுக்கு பரதம் ஆடியபடி மலையேறினார். பரதம் குறித்தும் கலாச்சார நடனம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த முயற்சியை மேற்கொண்டதாக அவர் கூறினார்.