இந்தியா

மூக்கு வழியில் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து: 3, 4ஆம் கட்ட சோதனை நடத்த அனுமதி

JustinDurai
மூக்கு வழியே செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு சொட்டு மருந்தின் மீது 3 மற்றும் 4-ஆவது கட்ட சோதனைகளை மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் மூக்கு வழியிலான கொரோனா சொட்டு மருந்து சோதிக்கப்படுவது இதுவே முதன்முறை. பாரத் பயோடெக் நிறுவனம் நடத்திய முதல் கட்ட சோதனையில் 18 முதல் 60 வயதுக்குட்பட்டோருக்கு கொடுத்து சோதனை நடத்தப்பட்டதாகவும் அதில் மருந்து பாதுகாப்பானது என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் மத்திய அரசின் உயிரித் தொழில் நுட்பத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசியை பெண்களுக்கு செலுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு தேசிய பெண்கள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. பெண்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறைவாக உள்ளது என ஊடகங்களில் வெளியான தகவல்கள் அடிப்படையில் இந்த அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது.