இந்தியா

மத்தியப் பிரதேசம்: ‘போ கொரோனா போ’ கோஷம் போட்டு கையில் தீப்பந்தங்களுடன் ஓடிய கிராமவாசிகள்

மத்தியப் பிரதேசம்: ‘போ கொரோனா போ’ கோஷம் போட்டு கையில் தீப்பந்தங்களுடன் ஓடிய கிராமவாசிகள்

Veeramani

கொரோனா வைரஸை விரட்டுவதாக மத்தியப்பிரதேச கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலர் கையில் தீப்பந்தத்துடன் 'போ கொரோனா போ' என்று கோஷமிட்டபடி ஒடிய வீடியோ வைரலாகி வருகிறது.

மத்தியப்பிரதேச மாநிலத்தின் அகர் மால்வா மாவட்டத்தில் உள்ள சில கிராமவாசிகள் 'போ கொரோனா போ' என்று கோஷமிட்டபடி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கையில் எரியும் தீப்பந்தங்களுடன் ஓடினார்கள். தீப்பந்தங்களுடன் ஓடுவதால் கோவிட் -19 அவர்களின் கிராமத்திலிருந்து அழிந்துவிடும்  என்ற நம்பிக்கையில் இதனை செய்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

கணேஷ்புரா கிராமத்தில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ வெளிவந்து தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், சில கிராமவாசிகள் கையில் தீப்பந்தத்துடன் தெருக்களில் ஓடுவதைக் காணலாம், "போ கொரோனா போ" என்று கத்திக்கொண்டு ஓடும் அவர்கள் தீப்பந்தங்களை கிராமத்திற்கு வெளியே தூக்கி எறிவதையும் காண முடிந்தது.