இந்தியா

பெங்களூருவில் குண்டு குழி சாலைகள்: அறிக்கை கேட்கிறார் ராகுல் காந்தி

பெங்களூருவில் குண்டு குழி சாலைகள்: அறிக்கை கேட்கிறார் ராகுல் காந்தி

webteam

பெங்களூரு நகரில் பராமரிக்கப்படாமல் மோசமாக உள்ள சாலைகளின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி கர்நாடக மாநில காங்கிரஸாருக்கு, கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளால் விபத்துகள் ஏற்பட்டு சிலர் உயிரிழந்த சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதையடுத்து அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக அண்மையில் பெங்களூருவில் கடல் கன்னி போல் வேடமணிந்து நடிகை சோனு நூதன முறையில் போராட்டம் நடத்தினார். 

இந்நிலையில் மாநிலத்தில் பராமரிக்கப்படாமல் உள்ள சாலைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி, ஆளும் காங்கிரஸாருக்கு கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். மேலும் இப்பிரச்சனைக்கு தீர்வு காண என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என மாநில அரசிடம் கேட்கும்படி கர்நாடக காங்கிரஸ் தலைவர் வேணுகோபாலுக்கும் உத்தரவிட்டுள்ளார்.