இந்தியா

பெங்களூரு நகருக்கு பிரத்யேக லோகோ அறிமுகம்

பெங்களூரு நகருக்கு பிரத்யேக லோகோ அறிமுகம்

webteam

இந்தியாவில் முதல் முறையாக பெங்களூரு நகருக்கென்று பிரத்யேக லோகோ‌ ஒன்றை கர்நாடக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

கர்நாடக சுற்றுலாத்துறை சார்பில் நம்ம பெங்களூரு திருவிழா எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெங்களூருவின் கலை, கலாச்சாரம் உள்ளிட்டவற்றை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் பின்னர் அமைச்சர் பிரியங்க் கார்கே பெங்களூரு மாநகருக்கான‌ லோகோவை அறிமுகப்படுத்தினார். நியூயார்க், பாரிஸ், லண்டன் உள்ளிட்ட நகரங்களின் வரிசையில் இந்தியாவில் முதல் முறையாக பெங்களூரு நகருக்கென தனி லோகோ உ‌ருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.