இந்தியாவில் மாணவர்களுக்கான சிறந்த நகரமாக பெங்களூர் திகழ்வதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கான சிறந்த நகரங்களின் தரவரிசையை ‘குளோபல் கன்சல்ன்டன்சி கியூஎஸ் குவாக்குவாரெல்லி சைமண்ட்ஸ்’ அமைப்பு வெளியிட்டுள்ளது. நகரத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை மற்றும் செயல்பாடு, வேலைவாய்ப்பு, விரும்பக் கூடியது, மலிவானது மற்றும் தரமான வாழ்க்கை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தேர்வு செய்யப்படுகின்றது.
இந்த தரவரிசையின் அடிப்படையில் உலக அளவில் மாணவர்களுக்கான சிறந்த நகரமாக லண்டன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் பெங்களூர் நகரம் சிறந்ததாக அந்த பட்டியல் தெரிவிக்கின்றது.
முதல் பத்து இடங்கள்:
1. லண்டன்
2. டோக்கியோ
3. மெல்போர்ன்
4. முனிச்
5. பெர்லின்
6. மாண்டிரல்
7. பாரிஸ்
8. ஸுரிச்
9. சிட்னி
10. சியோல்
இந்திய அளவில் பெங்களூர் (81), மும்பை (85), டெல்லி (113), சென்னை (115) ஆகிய இடங்களை பிடித்துள்ளன. ஆசியாவை பொறுத்தவரை டோக்கியோ (2), சியோல் (10), ஹாங்காங் (14), பெயிஜிங் (32), ஷாங்காய் (33) ஆகிய இடங்களை பிடித்துள்ளன.