கர்நாடகாவில் 9 ஆயிரம் தேங்காய்களை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி மலைக்கோட்டை தாயுமான சாமி கோவிலில் உச்சிப் பிள்ளையாருக்கு 75 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கொழுக்கட்டை படையலிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 600 ஆண்டுகள் பழமையான மணக்குள விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாடு முழுவதும் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் வீதியெங்கும் வைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 9 ஆயிரம் தேங்காய்களை பயன்படுத்தி வித்தியாசமாக அமைக்கப்பட்ட விநாயகர் சிலை அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த சிலை 30 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை கடந்த 20 நாட்களாக 70 பக்தர்கள் இணைந்து வடிவமைத்துள்ளனர். தேங்காய்கள் தவிர 20 வகையான காய்கறிகளையும் இந்த கோவிலை உருவாக்க பயன்படுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு கரும்புகளால் விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.