இந்தியா

அமைச்சரான பிறகும் ரஞ்சிக் கோப்பையில் சதம் விளாசி அசத்திய மனோஜ் திவாரி

ச. முத்துகிருஷ்ணன்

ஜார்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதிப் போட்டியில் மேற்கு வங்க விளையாட்டுத் துறை அமைச்சர் மனோஜ் திவாரி சதம் விளாசி அசத்தினார்.

மேற்கு வங்க விளையாட்டுத் துறை அமைச்சர் மனோஜ் திவாரி ஜார்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதிப் போட்டியில் சதம் விளாசி அசத்தினார். நடந்து வரும் ஆட்டத்தின் இரண்டு இன்னிங்சிலும் முறையே 73 மற்றும் 136 ரன்கள் எடுத்தார். திவாரி தனது 28வது முதல் தர சதத்தை அடித்த பிறகு மகிழ்ச்சியடைந்தார். மைதானத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

ஜார்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பையின் நான்காவது காலிறுதி ஆட்டத்தின் இறுதி நாளில் பெங்கால் அணி 750 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. 185 பந்துகளில் 136 ரன்கள் குவித்த பின் மனோஜ் திவாரி அவுட்டாகி வெளியேறினார். மேற்கு வங்க விளையாட்டு அமைச்சரான பிறகு அவர் அடித்த முதல் முதல் தர சதம் இதுவாகும்.

36 வயதான மனோஜ் திவாரி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2021 இல் ஷிப்பூர் தொகுதியில் பிஜேபியின் ரத்தின் சக்ரவர்த்தியை தோற்கடித்து வெற்றி பெற்றார். அவர் தற்போது மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக பணியாற்றுகிறார்.