மேற்கு வங்காளத்தில் உள்ள கல்லூரியின் வகுப்பறையிலேயே முதலாமாண்டு மாணவனை மாலை மாற்றி பேராசிரியை திருமணம் செய்து கொண்டதுபோன்ற காட்சிகள் இணையத்தில் வைராலன நிலையில், தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
மேற்கு வங்காளம், நாடியா மாவட்டத்தில் ஹரிங்காட்டாவில் அமைந்துள்ளது மவுலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ( MAKAUT). இங்கு உளவியல் பிரிவில் பணியாற்றி வரும் பேராசிரி்யரும் அதே பிரிவில் முதலாமாண்டு படிக்கும் மாணவனும் மணமகன் , மணமகளை போல ஆடை அணிந்து வகுப்பறையிலேயே திருமணம் செய்து கொள்வது போன்ற காட்சிகள்தான் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது.
வீடியோவில், பெங்காலி முறைப்படி திருமணம் செய்துகொள்வதும், மாணவன் ஆசிரியரின் நெற்றியில் குங்குமம் வைக்கும் போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியநிலையில், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக அதிகாரிகள் இதுகுறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, விளக்கமளித்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம், “இது குறித்து விளக்கமளித்துள்ள சம்பந்தப்பட்ட பேராசிரியை, இது உண்மையான திருமணம் இல்லையென்றும், இது பாடப்பிரிவின் ஒரு அங்கமாக நடத்தப்பட்ட நிகழ்வு என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இது வேண்டுமென்றே தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, இதுகுறித்து விசாரணை செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்களின் விசாரணை முடிவுகளை பிறப்பிக்கும் வரை சம்பந்தப்பட்ட பேராசிரியையும், மாணவரையும் விடும்பில் இருக்கும்வரை கேட்டுக்கொண்டுள்ளோம்.
உண்மையாகவே, பேராசிரியரின் நடவடிக்கை முற்றிலும் கல்வி சார்ந்ததா அல்லது ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை தேவையா என்பது விசாரணைக்கு பின் தெரியவரும்.” என்று தெரிவித்துள்ளனர்.