இந்தியா

அரசியல் ரீதியான சந்திப்புகளை தொடரும் மம்தா - எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க திட்டமா?

அரசியல் ரீதியான சந்திப்புகளை தொடரும் மம்தா - எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க திட்டமா?

கலிலுல்லா

கோவா சென்றுள்ள மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி 2ஆவது நாளாக இன்றும் அரசியல் ரீதியான சந்திப்புகளை தொடர்கிறார்.

கோவா ஃபார்வர்டு கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாயை சந்திக்கும் மம்தா பானர்ஜி சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து பேச உள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள விஜய் சர்தேசாய் கோவாவில் நடைபெற்று வரும் லஞ்ச ஊழல் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை அவசியம் என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கோவா மீனவ அமைப்பினரையும் தனது கட்சி நிர்வாகிகளையும் மம்தா நேற்று சந்தித்து பேசியிருந்தார்.

கோவா சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்க திரிணாமூல் காங்கிரஸ் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவது மம்தாவின் தேசிய அரசியலை நோக்கிய நகர்வாக இருக்க கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் கோவா சென்று அங்குள்ள மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளார்.