இந்தியா

குழந்தைகளுக்கான படுக்கை வசதி: ரயில்களில் 'பேபி பெர்த்' அறிமுகம்

Veeramani

ரயில்களில் குழந்தைகளுக்கான படுக்கை வசதி சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளோடு பயணிப்பவர்களுக்காக இந்த புதிய வசதியை ரயில்வே நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ரயில்களில் கீழ் படுக்கைகளின் ஓரத்தில் இந்த பேபிபெர்த் இணைக்கப்படுகிறது. இதனால் தாய் அல்லது தந்தையுடன் சேர்ந்து குழந்தையும் வசதியாய் உறங்க முடியும்.



இந்த பேபி பெர்த் வசதி, லக்னோ-டெல்லி இடையே இயக்கப்படும் லக்னோ மெயில் ரயிலில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வரவேற்பை பொருத்து மற்ற ரயில்களிலும் பேபி பெர்த் வசதி ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேபி பெர்த் படுக்கை பயன்பாட்டில் இல்லாதபோது, அதனை மடித்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.