இந்தியா

கரடி தாக்கி 4 பேர் பலி

கரடி தாக்கி 4 பேர் பலி

webteam

சத்தீஸ்கரில் கரடி தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் பீதிக்கு ஆளாகியுள்ளனர். 

சத்தீஸ்கர் மாநிலம் அம்பசுவா கிராமத்தை சேர்ந்த இரண்டு பேர் அங்குள்ள வனப் பகுதியில் தங்களது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வனப்பகுதியிலிருந்து வந்த கரடி ஒன்று அவர்களை தாக்கியுள்ளது. இதில் கிஸ்போட்டா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இதேபோல், சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ராமானுஜ் பகுதியில் கரடி தாக்கியதில் இரு பேர் உயிரிழந்தனவர். படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவங்களால் அப்பகுதியில் உள்ள மக்கள் பீதிக்கு ஆளாகியுள்ளனர்.