இந்தியா

"குறுகிய நேரத்தில் அதிதீவிர தாக்குதலுக்கு தயாராக வேண்டும்" - இந்திய விமானப்படை தளபதி

Veeramani

மிகக்குறைந்த நேரத்தில் அதிதீவிரமான தாக்குதல்களுக்கு தயாராக வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளதாக இந்திய விமானப்படை தளபதி ஏர்சீஃப் மார்ஷல் விஆர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், மாறி வரும் உலக அரசியல் சூழல்களில் எந்த நடவடிக்கைக்கும் விமானப்படை தயார் நிலையில் இருக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக குறுகிய நேரத்தில் அதிதீவிர தாக்குதல்களுக்கு விமானப்படை தயாராக இருக்க வேண்டும் என்றும், ஆனால் இது போன்ற தாக்குதல்கள் குறைந்த நேரமே நீடிக்க கூடியதாக இருக்கும் என்றும் ஏர்சீஃப் மார்ஷல் விஆர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.



இது போன்ற சூழலுக்கு தயாராவது சவால் நிறைந்ததாக இருக்கும் என தெரிவித்த சவுத்ரி, நமது படை பலங்கள் வெவ்வேறு இடங்களில பரந்து விரிந்துள்ளதை கருத்தில் கொண்டு இவ்வாறு கூறுவதாக தெரிவித்தார்.

இதையும் படிக்க:இந்தி தேசிய மொழியா? நடிகர் அஜய் தேவ்கனை வறுத்தெடுத்த நெட்டீசன்கள்!