இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி நெஞ்சு வலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள வுட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் இன்று பகல் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நல கோளாறு குறித்து தகவல் எதுவும் தெளிவாக இல்லை என்றாலும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மதியம் கங்குலியை பரிசோதித்த மருத்துவர்கள் குழு அவரது இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர். அதன்படி அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் விரைந்து குணமடைய வேண்டுமென முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கங்குலிக்கு 48 வயதாகிறது.
இந்நிலையில், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை முடிந்ததாகவும். அவர் உல் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது. கங்குலி தலைமையிலான இந்திய அணி பல வெற்றிகளை குவித்துள்ளது. தோனி, யுவராஜ், கைப் மாதிரியான வீரர்கள் எல்லாம் கங்குலியின் கேப்டன்சியில் அறிமுகமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.