இந்தியா

வங்கக் கடலில் உருவாகியுள்ள அசானி புயல்: பெயர் காரணம்?

EllusamyKarthik

வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற்று அந்தமான் நிகோபார் தீவுகளை கடக்கும் என தெரிகிறது. இந்த புயலுக்கு ‘அசானி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை இலங்கை சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வடக்கு இந்திய பெருங்கடலில் உருவாகும் சூறாவளிக்கு இந்தியா உட்பட 13 நாடுகள் பெயர் வைப்பது வழக்கம். இந்த பெயர்கள் முன்கூட்டியே பரிந்துரை செய்யப்பட்டிருக்கும். அந்த வகையில் அசானி என்ற பெயரை இலங்கை பரிந்துரைத்துள்ளது. 

அசானி: பெயர் காரணம்?

சிங்கள மொழியில் அசானி என்பதற்கு சினம்/கடும் கோபம் என்பதை சுட்டிக் காட்டுகிறது. இந்த புயல் வரும் 23-ஆம் தேதியன்று வங்கதேசம் மற்றும் மியான்மர் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தமான் தீவு பகுதியை ஒட்டியுள்ள மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 90 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை முதல் மிக கனமழை வரை அந்தமான் நிகோபார் தீவுகளில் பதிவாக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.