ஓய்வுக்குப் பிறகு ஊடங்கள் மூலம் சர்ச்சை ஏற்படுத்துவதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வர்க்கு இந்திய பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த செல்லமேஸ்வர் கடந்த 22ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் பணியில் இருந்தபோது பல அதிரடி தீர்ப்புகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியவர். சில மாதங்களுக்கு முன்னர் சக நீதிபதிகளுடன் செய்தியாளர்களை சந்தித்த இவர், உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் அமர்வுக்கு மாற்றப்படுவதில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டினார். வரலாற்றிலேயே முதல்முறையாக பணியில் இருக்கும்போதே உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்த சம்பவமாக அது அமைந்தது.
இவர் பணியில் இருக்கும் போது உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமையை நீதிபதி கே.எம்.ஜோசப்-ஐ உச்சநீதிமன்ற நீதிபதியாக கொலீயத்தால் தேர்வு செய்ய பாடுபட்டவர். ஆனால் அது நிறைவேறவில்லை. இந்த சமயத்தின் தான் கடந்த 22ஆம் தேதி அவர் ஓய்வுபெற்றார். இந்நிலையில் செல்லமேஸ்வர்க்கு இந்திய பார் கவுன்சில் மற்றும் அதன் தலைவர் மேனன் மிஸ்ரா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்லமேஸ்வர் ஓய்வுக்குப் பின்னர் அதிகமாக ஊடங்களை சந்தித்து சர்ச்சைகளை கிளப்புவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் ஊடங்களை சந்தித்த பின்னர் சிபிஐ தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜாவை சந்தித்ததையும் பார் கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.