இந்தியா

“இ-சிகரெட்டுக்கு மட்டும் தடை ஏன்?” - மோடியின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கேள்வி

“இ-சிகரெட்டுக்கு மட்டும் தடை ஏன்?” - மோடியின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கேள்வி

rajakannan

இ-சிகரெட்டுக்கு தடை விதித்தது வினோதமானது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷமிகா ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பேராசிரியையும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஷமிகா ரவி தன்னுடைய ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில்,“அதிக வரி விதிக்கப்படும் போது தடை எதற்கு?. மற்ற புகையிலை பொருட்கள் இருக்கும் போது இ-சிகரெட்டுக்கு மட்டும் தடை விதிப்பது வினோதமானது. சுகாதார அல்லது நிதி இரண்டில் எந்த அடிப்படையில் இந்தமுடிவு எடுக்கப்பட்டது. இதில் உள்ள லாஜிக் என்ன?” என குறிப்பிட்டுள்ளார்.