செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
பெங்களூரு ரூரல் மாவட்டம் தேவனஹள்ளி அருகே உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாங்காக்கில் இருந்து வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது மூன்று பயணிகளின் லக்கேஜ் பையில் ஹைட்ரோபோனிக்ஸ், மைராவன் மற்றும் பூக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான கஞ்சாவை தனித்தனி கவரில் அடைத்து பாங்காக்கில் இருந்து சட்டவிரோதமாக பெங்களூருக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து, மூன்று பேரையும் கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 23 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.