சைபர் குற்றம்
சைபர் குற்றம் web
இந்தியா

‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பாணியில் ஒரு சைபர் குற்றம்... ஏமாந்த தனியார் நிறுவன நிர்வாகி!

Jayashree A

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், சத்யன் ஆகியோர் தங்களை சிபிஐ அதிகாரிகள் என்று போலியாக நடித்து சமூகத்தில் பெரும் பணக்காரர்களை ஏமாற்றி பணத்தை பறிப்பார்கள்.

அதே பாணியில் பெங்களூரில் ஒரு கும்பல் தங்களை TRAI (இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மற்றும் மும்பை போலீஸ் அதிகாரிகள் என கூறிக்கொண்டு இன்போசிஸ் நிர்வாகி ஒருவரை ஏமாற்றி 3.7 கோடி ரூபாயை மிரட்டி பணம் பறித்துள்ளது.

சைபர் கிரைம்

இந்த சைபர் குற்றவாளிகளில் ஒருவர் கடந்த நவம்பர் 21 அன்று இன்போசிஸ் நிர்வாகியை தொடர்பு கொண்டு, மும்பை வகோலா காவல் நிலையத்தில் அவர் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். இவ்வழக்கிலிருந்து அவர் விடுபடவேண்டுமென்றால் 3.7 கோடியை வெவ்வேறு வங்கிக்கணக்குகளுக்கு மாற்றும்படி வற்புறுத்தி இருக்கிறார்கள்.

இன்போசிஸ் நிர்வாகியும் பயத்தின் காரணமாக அவர்கள் கேட்ட தொகையை அவர்கள் சொன்ன வங்கி கணக்கில் பிரித்து அனுப்பி இருக்கிறார். அதன் பிறகுதான் அவர் ஏமாற்றபட்ட விவரம் தெரியவந்துள்ளது. உடனடியாக அவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். பணப்பரிமாற்றம் 3 கோடிக்கு மேல் இருந்ததால் இவ்வழக்கை குற்றப்புலனாய்வுத்துறைக்கு (CID) க்கு மாற்றப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

சைபர் கிரைம்

முன்னதாக தான் ஏமாற்றப்பட்டது எப்படி என்று போலிசாரிடம் நிர்வாகி தெரிவித்தது என்னவென்றால், “TRAI வேலை செய்யும் ஒருவரிடமிருந்து என் மொபைலுக்கு கால் ஒன்று வந்தது. அதில் எனது மொபைல் எண் தவறான விளம்பரத்திற்கு உபயோகப்படுத்தப்படுவதாக கூறினர். ஆனால் அது எனது எண் கிடையாது என்று கூறினேன். ஆனால் அவர் எனது ஆதாரைக்கொண்டு இந்த எண் வாங்கப்பட்டதாக கூறினார். இந்த விசாரணைக்காக சிபிஐயை சந்திக்கவேண்டும் என்றும் ஆணையிட்டார். தவறினால் கைதுசெய்துவிடுவோம் என்றும் மிரட்டினர்.

இவர்களைத்தொடர்ந்து ஒரு வீடியோ அழைப்பு வந்தது அதில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் இருந்த அதிகாரி ஒருவர் எனது அடையாள அட்டைகளையும் எனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட புகாரின் நகலையும் காட்டினார்கள். இந்த வழக்கிலிருந்து நான் விடுவிக்கபட வேண்டுமென்றால் 3.7 கோடி ரூபாயை அவர்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு மாற்ற வேண்டும் என்று கூறினர். நானும் பயத்தில் இப்படி செய்துவிட்டேன்“ என்று கூறியிருக்கிறார்.

சைபர் கிரைம்

பொதுவாக சைபர் குற்றவாளிகள் பல்வேறு வகையில் மக்களை ஏமாற்றி அவர்களின் கணக்கிலிருந்து பணத்தை பறித்து வரும் நிலையில், தற்பொழுது அதற்கும் ஒரு படி மேலே சென்று போலிஸ் ஸ்டேஷன், சிபிஐ போன்ற செட்டுகளை உருவாக்கி, வீடியோ காலில் மிரட்டி பணம் பறிப்பது அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.