gun shoot picture
gun shoot picture google
இந்தியா

18 வருடங்களாக ஏமன் இளைஞரின் தலையில் சிக்கியிருந்த தோட்டாவை அகற்றிய இந்திய மருத்துவர்கள் சாதனை!

Jayashree A

ஏமன் நாட்டை சேர்ந்த ஒருவர் தனது தாய் தந்தை மற்றும் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். சிறுவயது முதலே அவர் தனது தந்தைக்கு உதவியாக விவசாயத்தை கவனித்து வந்துள்ளார். அவருக்கு பத்து வயது இருக்கும் பொழுது அந்த கிராமத்தில் (18 வருடங்களுக்கு முன்பு ஏமன் நாட்டில்) இரு பிரிவினருக்கிடையே சண்டை மூண்டுள்ளது. அச்சமயம், அவ்வழியாக வந்த இவரின் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இவரின் மீது பாய்ந்த குண்டானது இவரின் இடது காதருகே மிக சிக்கலாக இருக்கும் எலும்புகளிடையில் பாய்ந்து அங்கேயே சிக்கியுள்ளது.

அச்சமயத்தில் ஆபத்தான நிலையில் இருந்த இவரை உடனடியாக குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு இவரின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள் புல்லட்டை எடுக்கவில்லை. நாளடைவில் அவரது காயம் ஆறியபோதும், காதருகில் இருந்த புல்லட்டால் அடுத்த பத்து ஆண்டுகளில் செவித்திறன் குறைந்துள்ளது. இதனால் தனது இருபதாவது வயதில் முற்றிலும் காது கேளாதவராக மாறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அப்போது நடந்தது குறித்து பாதிக்கப்படட் நபர் கூறுகையில், “எனக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டது. ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அது மதிய நேரம். உடனடியாக மருத்துவமனைக்கு சென்றேன். மருத்துவமனையில் என்னுடைய காயங்களை மட்டும் சுத்தம் செய்தனர். ஆனால், அங்கு என் தலையில் இருந்த புல்லட் அகற்றப்படவில்லை” என்கிறார் அவர்.

இதனால், தொடர்ச்சியாக அவருக்கு காதில் பிரச்னைகளும், தலைவலி பிரச்னைகளும் ஏற்பட்டு வந்தன

இச்சமயத்தில் இவர் தனது நண்பர்கள் மூலம், இந்தியாவில் மருத்துவ வசதி நன்றாக இருக்கும் என்பதை தெரிந்துக்கொண்டு சமீபத்தில் பெங்களூரு வந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்குள்ள மருத்துவர்கள் இவருக்கு கடந்த வாரம் அதிநவீன சிகிச்சையை மேற்கொண்டு, சிக்கலாக இருந்த அந்த புல்லட்டை அகற்றி அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.

அகற்றப்பட்ட புல்லட்

தீவிர அறுவைசிகிச்சைக்குப்பின்அந்த நபருக்கு வலி நின்றுவிட்டது. அத்துடன் காது கேட்கும் திறன் சற்று அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், ஏமன் நாட்டிற்கு நலமுடன் அவர் திரும்பிச் சென்றுள்ளாராம்.