இந்தியா

பெங்களூரு: இயற்கை மீதான ஆர்வத்தால் வீட்டை காடாக மாற்றிய இயற்கை ஆர்வலர்!

kaleelrahman

பெங்களூருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவர், இயற்கை மீதான ஆர்வத்தில் தனது வீட்டையே காடாக மாற்றியுள்ளார்.

நடராஜா உபாத்யா என்ற அந்தப் பொறியாளரின் வீட்டின் சுற்றுச்சுவர் முதல் மொட்டை மாடி வரை செடி கொடிகள் மரங்கள்தான் அலங்கரிக்கின்றன. சிறிய செடிகள் என்றால் மண் தொட்டியிலும், வாழை பப்பாளி போன்ற பெரிய மரங்கள் என்றால் பிளாஸ்டிக் ட்ரம்களிலும் வேர் பிடித்து நிற்கின்றன.

"புவி வெப்பமயமாதலைத் தடுக்க எனது பங்களிப்பாக தாவரங்களை வளர்த்து வருகிறேன். 300 வகையான தாவரங்களை வளர்க்கிறேன்." என்கிறார் நடராஜா உபாத்யா.

பரபரப்பான நகரத்தின் மையத்தில் தாவரங்களை வளர்ப்பதால், 50 விதமான வண்ணத்துப் பூச்சிகள் அங்கு சிறகடிக்கின்றன. ஏராளமான பறவைகளின் கீச்சுக்குரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. பூக்களில் தேன் எடுக்க தேனீக்களும் ரீங்காரமிடுகின்றன. இந்தியாவின் தோட்ட நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரில் வீட்டையே காடாக மாற்றி கவனத்தை ஈர்த்து வருகிறார் நடராஜா உபாத்யா