புறாக்கள் pt web
இந்தியா

“புறாக்களுக்கு பொது இடங்களில் தீனி வழங்குவதை தடை செய்ய வேண்டும்” - தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு

புறாக்களுக்கு பொது இடங்களில் தீனி வழங்குவதை தடை செய்யக்கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்..

PT WEB

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் புறாக்களுக்கு பொது இடங்களில் கம்பு, சோளம் போன்ற தானியங்களை இடும் போக்கு பரவலாக உள்ளது. இதனால் நகர்ப்பகுதிகளில் புறாக்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக டெல்லியில் ஒரு கோடிக்கு மேற்பட்ட புறாக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

புறாக்கள்

பொது இடங்களில் பரந்து திரியும் புறாக்கள் இடும் எச்சங்களால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சுவாசக்கோளாறுகள் அதிகளவில் ஏற்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றை அடிப்படையாக கொண்டு அர்மான் பலிவால் என்ற 13 வயது சிறுவன் சார்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசமைப்பு சாசனத்தின் 21 வது பிரிவு ஆரோக்கியமான சுற்றுச்சூழலில் வாழும் உரிமையை பொது மக்களுக்கு அளிப்பதால், அத்தகைய சூழலுக்கு எதிரான நடவடிக்கைகளை தடை செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

மும்பை உள்ளிட்ட மகாராஷ்ட்ர நகரங்களில் பொது இடங்களில் புறாக்களுக்கு தீனி அளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் உணவு மற்றும் தண்ணீர் சுலபமாக கிடைப்பதால் புறாக்கள் அதிகளவில் இனப்பெருக்கம் செய்கின்றன என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் புறாக்களின் எச்சங்கள் கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் அதிகம் விழுந்து சுகாதார கேடுகளை ஏற்படுத்துவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.