பெண் குழந்தைகள் கடத்தப்பட்டதாக கைது செய்யப்பட்ட நித்யானந்தாவின் இரண்டு பெண் சீடர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ஆமதாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
குஜராத்தில் நித்யானந்தாவின் முன்னாள் சீடரான ஜனார்தன ஷர்மாவின் 2 பெண்களையும் கடத்தி கொடுமைப்படுத்துவதாக அளிக்கப்பட்ட புகாரில், ஆமதாபாத் ஆசிரம பொறுப்பாளர் பிரன்பிரியா மற்றும் அவரது உதவியாளர் பிரியா தத்வா ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து அவ்விருவரும் தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனு கடந்த மாதம் 27 ஆம் தேதி தள்ளுபடி செய்யபட்டது. இதையடுத்து இருவர் சார்பிலும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஆமதாபாத் நீதிமன்றம், இருவரும் தீவிரமான குற்றத்தில் ஈடுபட்டுள்ளதால் ஜாமீன் வழங்க முடியாது என உத்தரவிட்டது.