இந்தியா

வராக் கடன்: மத்திய அரசிடம் விபரம் கேட்கிறது உச்சநீதிமன்றம்

வராக் கடன்: மத்திய அரசிடம் விபரம் கேட்கிறது உச்சநீதிமன்றம்

Rasus

வராக் கடன்கள் தொடர்பான வழக்கு விபரங்களை முழுமையாகத் தருமாறு மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.

இந்திய பொதுத்துறை வங்கிகளின் பலவற்றில் வராக் கடன் விழுக்காடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பல தனியார் நிறுவனங்களுக்கு, பொதுத்துறை வங்கிகள் வழங்கிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் தொகை வசூலிக்க இயலாத நிலை உள்ளது. வராக் கடனால் வங்கிகளின் வலிமை மற்றும் பாதுகாப்புத் தன்மை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் இன்று வந்தது. அப்போது கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் இதுவரை நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வராக் கடன்களை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளைத் தெளிவுபடுத்துமாறு உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்டுள்ளது. கடன் மீட்பு நடவடிக்கைகளில் உள்ள பிரச்னைகள் குறித்து முழுமையாக ஆராயவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.