இந்தியா

பாபர் மசூதி வழக்கு: வேறு இடத்தில் மசூதி கட்டிக்கொள்கிறோம் என்கிறது ஷியா அமைப்பு

பாபர் மசூதி வழக்கு: வேறு இடத்தில் மசூதி கட்டிக்கொள்கிறோம் என்கிறது ஷியா அமைப்பு

webteam

பாபர் மசூதி வழக்கில் மூன்று மனுதாரர்களில் ஒரு பிரிவான ஷியா வக்பு வாரியம், பிரச்சனைக்குரிய இடத்திலிருந்து சிறிது தூரம் தள்ளி மசூதியை கட்டிக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

பாபர் மசூதி உள்ள இடத்திற்கு உரிமை கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த வழக்கு விசாரணையின் போது, சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்து சிறிது தூரம் தள்ளி முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இடத்தில் மசூதியைக் கட்டிக்கொள்வதாக ஷியா வக்பு வாரியம் கூறியுள்ளது.

சர்ச்சைக்குரிய இந்த இடம் தொடர்பான வழக்கில் ஷியா வக்பு வாரியமும் ஒரு மனுதாரர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்த வழக்கில் 2010 ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச், பாபர் மசூதி உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டது. இந்நிலையில் மனுதாரர்களில் ஒருவரான ஷியா வக்பு வாரியம், அந்த இடத்தை விட்டுக் கொஞ்சம் தள்ளி மசூதியைக் கட்டிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளது.