பிரதமர் மோடியை ராவணனுடன் ஒப்பிட்டு உத்தரப்பிரதேச மூத்த அமைச்சர் ஆசாம் கான் பேசியுள்ளார்.
சர்ச்சைக் கருத்துகளுக்குப் பெயர்போன ஆசாம் கான், அவரது சொந்த தொகுதியான ராம்பூரில் நடந்த சமாஜ்வாதி கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது பிரதமர் மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக ஆசாம் கான் இவ்வாறு விமர்சித்தார். அவர் பேசுகையில், 130 கோடி மக்களை ஆளும் அரசன், ராவணனின் உருவ பொம்மையக் கொளுத்துவதற்காக லக்னோவுக்குச் செல்கிறார். ஆனால், உண்மையான ராவணன் லக்னோவில் இல்லை டெல்லியில் இருக்கிறார் என்பதை அவர் மறந்துவிட்டார் என்று விமர்சித்தார். மேலும், பணக்காரர்களுக்கு ஆதரவாகவே பிரதமர் மோடி செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.