இந்தியா

டெல்லியில் மீண்டும் போராட்டம்: அய்யாக்கண்ணு அறிவிப்பு

டெல்லியில் மீண்டும் போராட்டம்: அய்யாக்கண்ணு அறிவிப்பு

webteam

மத்திய அர‌சைக் கண்டித்து டெல்லியில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க‌த் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கடன் விடுதலை மாநாடு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றாத ம‌த்திய அரசைக் கண்டித்து டெல்லியில் வருகின்ற 16, 17ம் தேதிகளில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார். போராட்டத்தில் வெற்றி கிட்டவில்லையெனில் வீர மரணம் அடையவும் தயாராக உள்ளதாக கூறினார்.