அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில், 2023-ஆம் ஆண்டு பக்தர்களுக்காக திறக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சுமார் ஆயிரத்து நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோயில் அறக்கட்டளையின் தலைவர் நிரூபேந்திர மிஸ்ரா தலைமையில் பொறியாளர்கள் மற்றும் கட்டுமான வல்லுனர்கள் கடந்த மாதம் சந்தித்துப் பேசினர்.
அப்போது ராமர் கோயிலை 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பக்தர்களுக்காக திறப்பது என அவர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இருப்பினும், கோயில் கட்டுமானப் பணிகள் 2025ஆம் ஆண்டுதான் முழுமையாக முடிவடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.