அயோத்தி ராமர் கோயில் File image
இந்தியா

அயோத்தி ராமர் கோயில் ஓராண்டு நிறைவு விழா, சிறப்பு நிகழ்ச்சிகளுடன் தொடங்கின!

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற்று ஓராண்டு ஆகும் நிலையில் அங்கு சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன.

PT WEB

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற்று ஓராண்டு ஆகும் நிலையில் அங்கு ‘ஓராண்டு நிறைவு விழா’வுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. வேத பாராயணங்களுடன் தொடங்கிய ஓராண்டு நிறைவு விழாவில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவில்

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் சிலைக்கு அபிஷேகங்கள், ஆரத்தி செய்து வழிபட்டார். அப்போது 56 வகையான உணவுகளும் ராமருக்கு நிவேதனம் செய்யப்பட்டன.

கடந்தாண்டு நடைபெற்ற திறப்பு விழாவிற்கு அழைக்கப்படாமல் விடுபட்ட முக்கிய பிரமுகர்களுக்கு இம்முறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆடல் பாடல்களுடன் ஓராண்டு நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெற உள்ள விழாவில் நாடெங்கும் இருந்து பக்தர்களும் துறவிகளும்
குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.