இந்தியா

அயோத்தியில் பிரதமர் மோடிக்கு வெள்ளிக் கிரீடம் பரிசு!

அயோத்தியில் பிரதமர் மோடிக்கு வெள்ளிக் கிரீடம் பரிசு!

JustinDurai

ராமர் கோயில் பூமி பூஜைக்காக அயோத்தி வந்தடைந்த பிரதமர் மோடி, அங்குள்ள பத்தாம் நூற்றாண்டு கோயிலான அனுமன் கர்கி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.

அங்கு பிரதமர் மோடிக்கு வெள்ளிக் கிரீடம் பரிசளிக்கப்பட்டது. அவருடன் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் வந்தார்.

அதனைத் தொடர்ந்து ராம்லல்லா விராஜ்மன் என்ற குழந்தை ராமர் கோயிலில் பாரிஜாத (இரவு பூக்கும் மல்லிகை) மலர்ச்செடியை மோடிநட்டார். தற்போது ராமர் கோயிலில் பூமி பூஜை தொடங்கியுள்ளது.