அயோத்தி வழக்கின் தீர்ப்புகள் ட்விட்டரில் உலக அளவில் டாப் 5 இடங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அயோத்தி நிலபரப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பில் 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டதோடு, இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் மத்திய, உத்தரப் பிரதேச மாநில அரசுகள் 5 ஏக்கர் இடத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்டுவதற்கு அமைப்பை 3 மாதத்திற்குள் ஏற்படுத்த வேண்டும் என்றும், நிலத்தை மத்திய அரசே நிர்வகிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், அயோத்தி வழக்கு தொடர்பான ஹேஷ்டேக்குகள் உலக அளவில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. முதல் இடத்தில் #AYODHYAVERDICT, இரண்டாம் இடத்தில் #RamMandir, மூன்றாம் இடத்தில் #AyodhyaJudgment, நான்காம் இடத்தில் #JaiShriRam, 5ஆம் இடத்தில் #AyodhyaCase ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன.