இந்தியா

பெங்களூரில் பரவும் பறவைக் காய்ச்சல்: கண்காணிப்பு தீவிரம்

பெங்களூரில் பரவும் பறவைக் காய்ச்சல்: கண்காணிப்பு தீவிரம்

webteam

கர்நாடக மாநிலம் பெங்களூரு கிழக்குப் பகுதியில் பறவைக் காய்ச்சல் நோய் பரவியுள்ளது. இதையடுத்து அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தசரஹலி பகுதியில் இருக்கும் சில கோழிப்பண்ணைகளில் ஏராளமான கோழிகள் செத்து மடிந்ததால் அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து கோழிகள் எடுத்துச் செல்லப்பட்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருக்கும் கால்நடை நோய் தடுப்பு தேசிய உயர் பாதுகாப்பு மையத்தில் வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அவை பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 
இதுகுறித்து கர்நாடக மாநில அரசுக்கும் தெரிவிக்கப்பட்டது. நிலைமைக் கட்டுக்குள் இருப்பதாக கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோழிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. அந்த பகுதியில் இருந்து 10 கிமீ சுற்றளவில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. தனியார் மருத்துவர்கள், கிராம பஞ்சாத்து உறுப்பினர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாகவும் கர்நாடக மாநில அரசு கூறியுள்ளது,.