குளிர்காலம் எக்ஸ் தளம்
இந்தியா

குளிர்காலம் | இந்தியாவில் சராசரி வெப்பநிலை உயர்வு.. ஆய்வில் தகவல்!

இந்தியாவில் குளிர்காலங்களில் சராசரி வெப்ப நிலை உயர்ந்து வருவது வானிலை மைய புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது

PT WEB

இந்தியாவில் குளிர்காலங்களில் சராசரி வெப்ப நிலை உயர்ந்து வருவது வானிலை மைய புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

குளிர்காலம்

100 ஆண்டு புள்ளிவிவரங்களை ஆய்வு செய்ததில் அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் வழக்கத்தை விட 1.01 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக இருந்ததும் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் 0.73 டிகிரி செல்சியஸ் அதிகம் இருந்ததும் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

எனினும் மார்ச் - முதல் மே வரையிலும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலும் சராசரி வெப்ப நிலை உயர்வு வீதம் மற்ற மாதங்களை காட்டிலும் சற்றே குறைவாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது வசந்த காலம் மற்றம் இலையுதிர் காலங்களின் அளவு சுருங்குவது இப்புள்ளிவிவரம் தெரிவிப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பருவநிலை மாற்ற பிரச்னையே காலநிலைகளின் மாற்றத்திற்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.