HEADLINES PT
இந்தியா

HEADLINES | ரிப்பன் மாளிகையில் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் முதல் கொட்டிய கனமழை வரை!

ரிப்பன் மாளிகையில் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் முதல் கொட்டிய கனமழை வரை

PT WEB
  • ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசிய இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல். அமெரிக்கா, இந்தியாவுக்கு வரி கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், கவனம் பெற்ற சந்திப்பு.

  • அமெரிக்காவின் வரி விதிப்புக்கு மத்தியில், பிரதமர் மோடியுடன் பிரேசில் அதிபர் தொலைப்பேசியில் உரையாடல். வர்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு நல்க இருவரும் சம்மதம்.

  • டெல்லியில் உள்ள இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு விருந்தளித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. தேர்தல் ஆணையத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து கூட்டணி கட்சியினருக்கு விளக்கி, ஆதாரங்களை சமர்ப்பித்ததாகவும் தகவல்.

  • தேர்தலில் மக்கள் அளிக்கும் முடிவை அவமதிக்கும் வகையில் ராகுல் காந்தி பேசுகிறார். ஆட்சியை பிடிக்க முடியாத விரக்தியால், தனது தன்மையை இழந்துவிட்டதாகவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சனம்.

  • இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரக ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொள்கை இல்லாததாலேயே, செல்வாக்கை இழந்துவிட்டது. ராஜபாளையம் பரப்புரைக் கூட்டத்தில் பழனிசாமி மீண்டும் சாடல்..

  • சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராடும் தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்ல காவல்துறை ஆணை. உத்தரவை மீறி போராட்டத்தை தொடர்ந்தால் வழக்குப்பதிந்து கைது நடவடிக்கை என்றும் எச்சரிக்கை.

  • திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை வழக்கில் கணவர் உட்பட 3 பேர் கைது. ஆர்.டி.ஓ. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தகவல்.

  • சேலம் ஆத்தூரில் நகைக்கடை உரிமையாளர்கள் மீது ஆசிட் வீசி, துணிகர கொள்ளை முயற்சி. தப்பியோட முயன்ற இருவரும் சிக்கினர்; துப்பாக்கி பறிமுதல்

  • சென்னை அம்பத்தூரில் வீட்டில் சிலிண்டர் வெடித்துச் சிதறி விபத்து. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்.

  • திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட. வேலூர், செய்யாறு பகுதிகளில் கொட்டிய கனமழை.

  • சேலத்தில் களைகட்டிய வண்டி வேடிக்கை நிகழ்ச்சி. மக்கள் வெள்ளத்திற்கு நடுவே, கடவுள் வேடமணிந்த பக்தர்களுடன் வலம் வந்த அலங்கார வண்டிகள்.

  • பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு பயணம். 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்துசென்ற விலங்கு பொம்மைகள்.

  • சென்னையில் முதல் பேடல் விளையாட்டு மையத்தை தொடங்கினார் எம்.எஸ்.தோனி. திறப்பு விழாவில் பங்கேற்ற ருத்துராஜ் கெய்க்வாட், அனிருத் உடன் பேடல் விளையாடி உற்சாகம்.

  • பாக்ஸ் ஆஃபிஸ் வருமானத்தில் புதிய சாதனைப் படைத்த ‘சைய்யாரா’..படத்தின் கிளைமாக்ஸை உருவாக்க, செயற்கை நுண்ணறிவு செயலியான ChatGPT-ஐ பயன்படுத்தியதாக படக்குழு தகவல்.