1. இந்தியாவுக்கான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார் ட்ரம்ப்.. அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பால் இந்திய வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம்...
2. அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது என மத்திய அரசு விமர்சனம். நாட்டு நலன்களை பாதுக்காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என உறுதி.
3. இந்தியப் பொருட்களுக்கான 50% வரி பொருளாதார மிரட்டல் என ராகுல்காந்தி விமர்சனம்... நாட்டு மக்களின் நலன்களுக்கு மேல், பிரதமர் மோடியின் பலவீனம் சென்று விடக்கூடாது என காட்டம்.
4. 6 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி... 31ஆம் தேதி தொடங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில்பங்கேற்க விருப்பதாக தகவல்.
5. அரசுத் திட்டங்களில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு... உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்ததாக அதிமுகவின் சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்.
6. திமுகவை விமர்சித்தால் கம்யூனிஸ்ட்கட்சிக்கு ஏன் வலிக்கிறது?... அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கேள்வி...
7. மேக வெடிப்பால் உருக்குலைந்த உத்தராகண்ட் மாநிலத்தில் தொடரும் மீட்புப் பணிகள்... தராலி கிராமத்தில் இருந்து 190 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்...
8. உத்தராகண்டில் பெருமழையால் கங்கை நதியில் நீர்மட்டம் உயர்வு...ரிஷிகேஷில் சிவன் சிலையை தொட்டு செல்லும் வெள்ளம்...
9. திருத்தணி, திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை... வெப்பம் தணிந்ததால் குளிர்ச்சியான சூழல்...
10. கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... சென்னையில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிப்பு...
11. சென்னை மூலக்கடையில் அட்டை தயாரிப்பு தொழிற்சாலையில் சிலிண்டர்கள் வெடித்ததால் பயங்கர தீவிபத்து... பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்...
12. சென்னை காவல் துறையில் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட மகளிருக்கு சலுகை... இரவு ரோந்து பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிப்பு... புதுக்கோட்டை அருகே நாடியம்மன் கோயிலில் மது எடுப்பு திருவிழா... பெண்கள் ஊர்வலமாக சென்று வழிபாடு...
13. அன்புமணி நடத்த உள்ள பொதுக்கு ழுவுக்கு தடை விதிக்கக் கோரி ராமதாஸ் தரப்பு வழக்கு... ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்...
14. திருப்பூரில் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு....சண்முகவேல் உடலுக்கு டிஜிபி சங்கர்ஜிவால் உள்ளிட்ட காவல் உயரதிகாரிகள் நேரில் அஞ்சலி....
15. திருப்பூரில் காவல் உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்டதன் எதிரொலி... திருச்சியில் குற்றங்களை தடுக்க காவல் துறையினர் துப்பாக்கியுடன் ரோந்து...
16. கோவையில் காவல் நிலையத்திற்கு வந்தவர், தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு...லாக்கப் மரணம் இல்லை என காவல் ஆணையர் விளக்கம்...