குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு. துணை ஜனாதிபதி தேர்தல், அமெரிக்க வரி சர்ச்சை, வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்டவை குறித்து பேசியதாக தகவல்.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தல்.
தூத்துக்குடி சிப்காட்டில் மின்சார கார் விற்பனையை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின். மினி உலக முதலீட்டாளர் மாநாட்டிலும் பங்கேற்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு நயினார் நாகேந்திரன் வீட்டில் 109 வகை உணவுடன் பிரம்மாண்ட விருந்து. தேர்தல் வியூகங்கள் தொடர்பாக 40 நிமிடங்கள் ஆலோசனை.
ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள குரோமிய கழிவுகளை தமிழக அரசு அகற்ற வேண்டும். பாமக விரைவில் தொடர் போராட்டம் நடத்தும் என அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை.
குரங்கணி அருகே சீமான் தலைமையில் மாடு மேய்க்கும் போராட்டம். வனத்துறை அனுமதி இல்லாமல் மேய்ச்சலில் ஈடுபட்டதால் சீமான் உள்ளிட்டோர் மீது வழக்கு.
கல்வி தான் சர்வாதிகார, சனாதன சங்கிலிகளை நொறுக்கும் ஆயுதம். அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் ஆவேசம்.
சேலம் மேட்டூரில் ஆடிப்பெருக்கு கோலாகலம். மனிதக் கடலாய் காவேரி கரைகள்! புனித நீராடிய பக்தர்கள்.
பரமத்தி வேலூரில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலில் மோட்ச தீபம். நாமக்கல், கரூர், ஈரோடுமாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபாடு.
உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 443ஆவது ஆண்டு திருவிழா. திவ்ய நற்கருணை பவனியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் ஒரே நாளில் 70 பேர் உயிரிழப்பு.. உணவுக்காக காத்திருந்தவர்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்.
அணுசக்தியை உருவாக்க ஈரானுக்கு உரிமை உண்டு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கருத்து. பாகிஸ்தான் - ஈரான் இடையே இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்து.
இந்தியாவுக்கு எதிரான கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி. இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்டிங்கால் வெற்றி முகம்.
ரசிகர்களை சுயநலத்துக்காக பயன்படுத்த மாட்டேன். திரைத் துறையில் 33 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி நடிகர் அஜித் குமார் அறிக்கை.