1. சென்னை மாநகரில் இரவு முழுவதும் பலத்த காற்று, இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை... கனமழையின் காரணமாக சாலையில் பெருக்கெடுத்த மழைநீர்...
2. தாம்பரம், ஆவடி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை... தாழ்வான இடங்களில் தேங்கிய தண்ணீர்...
3. நடப்பாண்டின் முதல் மேகவெடிப்பு நிகழ்வு, சென்னையில் ஏற்பட்டுள்ளதாக சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல்... ஒரு மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் 10 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்திருப்பதாகவும் பதிவு...
4. புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை... காரைக்குடி, பெரியகுளம் பகுதிகளிலும் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல்...
5. தமிழகத்தில் இன்றுமுதல் 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு... சென்னை நகரிலும் இன்று மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு...
6. இமாச்சல பிரதேசத்தில் மணிமகேஷ் யாத்திரை பாதையில் திடீர் வெள்ளப்பெருக்கு... 10 பக்தர்கள் உயிரிழந்த சோகம்... 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்பு...
7. உத்தராகண்டில் கடந்த 74 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை... வெள்ள பாதிப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு...
8. ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு... ராம்பன் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிப்பு...
9. உத்தராகண்ட் பத்ரிநாத் யாத்திரை வழித்தடத்தில் நிலச்சரிவு... பாறை உருண்டு விழுந்ததால் நெடுஞ்சாலை மூடல்...
10. திருப்பதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழை... திருமலையில் தொடர்ந்த மழையால் பக்தர்கள் சிரமம்...
11. 7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு... 2 நாட்கள் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகிறார்...
18. பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி... அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளுக்கு இந்தியா துணைநிற்கும் என பிரதமர் மோடி உறுதி...
19. பிஹாரில் பேரணி மேற்கொண்ட ராகுல்காந்தியை கருப்பு சட்டை அணிந்து வந்த பாஜகவினர் மறித்ததால் பரபரப்பு.... போராட்டக்காரர்களை அழைத்து பேசி, இனிப்பு வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம்....
20. அமெரிக்காவின் கூடுதல் வரியால் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து ஏற்றுமதி தொழில்களை பாதுகாக்க முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்... உடனடி நிவாரண நடவடிக்கைகளை எடுக்கக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதிய பழனிசாமி....
21. திமுக ஆட்சி பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் 10.62 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.... வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை தொடங்கும் முன்பு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு....
22. முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது குடும்ப முதலீடு செய்யவா?... மக்களின் கேள்விக்கு ஸ்டாலின் பதில் அளிப்பாரா என பழனிசாமி கேள்வி...
23. முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும் என நயினார் நாகேந்திரன் கேள்வி... பச்சைப் பொய் ஒன்றுதான் திமுகவின் முதலீடு என அன்புமணி குற்றச்சாட்டு...
24. வெளிநாட்டுப் பயணங்களுக்கான வெள்ளை அறிக்கையை முதலில் பிரதமர் மோடி வெளியிடட்டும்... நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்....
25. காட்டில் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணிலைக்கூட காணவில்லை... தவெகவை மீண்டும் மீண்டும் விமர்சிக்கும் சீமான்...
26. மதுரை மாநாட்டில் அறிவித்தபடி சுற்றுப்பயணத்துக்குத் தயாராகும் விஜய்... மாவட்ட நிர்வாகிகளுடன், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் ஆலோசனை...
27. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.... தற்போது உடல்நிலை சீராக இருப்பதாக எக்ஸ் வலைத்தளத்தில் எம்.பி. பதிவு...
28. திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்.... வாக்காளர் திருட்டு பிரச்சினையில் இருந்து மடைமாற்றம் செய்துவிடக்கூடாது என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி....
29. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிள்ளையார் சிலைகள் கரைப்பு... மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்ட பிள்ளையார் சிலைகள்...
30. சென்னையில் இன்று பிள்ளையார் சிலைகளை கரைக்க 4 இடங்கள் தேர்வு... போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீஸார் குவிப்பு...
31. உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம்... சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமார் பணியிடமாற்றம் ...
32. மராத்தா இடஒதுக்கீடு கோரி சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே பாட்டீல் உண்ணாவிரதம்... மும்பையின் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல்...
33. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலம் ஆலப்புழாவில் களைகட்டிய படகு போட்டி... கொட்டும் மழைக்கு இடையே நடைபெற்ற போட்டியை உற்சாகத்துடன் கண்டுகளித்த மக்கள்..
34. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகல்.... அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முடிவு என தகவல்...
35. உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி... ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி வெண்கலம் வென்று அசத்தல்....
36. ஏமனில், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சிப் படையின் பிரதமர் உயிரிழப்பு.... தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஹவுதி அமைப்பு எச்சரிக்கை...
37. சீன மாநாட்டில் அசத்தும் மனித உருவ ரோபோ! ஊடக மையத்தில் செய்தியாளர்களுக்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும் உதவும் வகையில் ஏற்பாடு..