modi, Ishiba, stalin x page
இந்தியா

HEADLINES|இந்தியா- ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் முதல் வெளிநாடு செல்லும் முதல்வர் வரை!

இன்றைய தலைப்புச் செய்தியானது, இந்தியா- ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து முதல் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்லும் முதல்வர் வரை விவரிக்கிறது.

PT WEB

புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில் இந்தியா- ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து முதல் முதலீடுகளை ஈர்க்கவெளிநாடு செல்லும் முதல்வர் வரை விவரிக்கிறது.

  • தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு இன்று காலை சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்படுகிறார்.

  • மூன்று கட்ட தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

  • தமிழகத்திற்கான கல்வித் தொகையை மத்திய அரசு வழங்க வலியுறுத்த வேண்டி, திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் இரவிலும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

  • தமிழகத்தில் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். பெரம்பலூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • கர்நாடகாவின் பல பகுதிகளில் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. துங்கபத்திரா அணையை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

modi, Ishiba, stalin
  • மஹாராஷ்டிராவில் மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக மீண்டும் போராட்டம் வெடித்தது. மும்பையில் திரண்ட போராட்டக்காரர்களால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

  • இந்தியா - ஜப்பான் இடையே வர்த்தகம், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

  • ருமேனியாவில் பூமிக்கடியில் வெடித்த இயற்கை எரிவாயுவினால், 25 மீட்டருக்கு பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.

  • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின், காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை மலேசிய இணையை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தது.

  • 2030இல் காமன்வெல்த் போட்டியை இந்தியா நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்து லண்டன் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளது.