நீரஜ் சோப்ரா, மோடி எக்ஸ் தளம்
இந்தியா

HEADLINES|ஜப்பான் சென்ற பிரதமர் மோடி முதல் நீரஜ் சோப்ரா வெற்றி வரை!

இன்றைய தலைப்புச் செய்தியானது, பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம் முதல் டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் அசத்திய ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா வரை விவரிக்கிறது.

PT WEB

புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில் பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம் முதல் டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் அசத்திய ஒலிம்பிக் நாயகன் வரை விவரிக்கிறது.

  • தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலாளராக சஜ்ஜன்சிங் ரா சவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • தமிழகத்தில் வரும் 3ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சென்னையில் ஒருசில இடங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

  • உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

  • ஆம்பூர் கலவரத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 22 பேருக்கும் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது

  • தெருநாய்களை கட்டுப்படுத்தக் கோரிய பொதுநல வழக்குகளை, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

நீரஜ் சோப்ரா, மோடி
  • 2 நாள் அரசு முறைப் பயணமாக ஜப்பான் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, 15வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

  • பா.ஜ.க வாக்குத் திருட்டில் ஈடுபடுவது குழந்தைகளுக்குக்கூட தெரிந்திருக்கிறது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

  • எதிர்பார்ப்பை எகிற வைத்த டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றுப் போட்டியில், 85.1 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இரண்டாமிடம் பிடித்தார்.

  • தமிழ்நாடு அணியிலிருந்து விலகி, திரிபுரா அணியில் விஜய் சங்கர் இணைந்துள்ளார். தமிழ்நாடு அணி தேர்வாளர்களிடமிருந்து பாதுகாப்பான உணர்வு கிடைக்காததே காரணம் என விளக்கமளித்துள்ளார்.

  • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.