இன்றைய தலைப்புச் செய்தியானது, சூடுபிடிக்கும் தவெக மாநில மாநாடு முதல் முதல் கனமழை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவரை விவரிக்கிறது.
1. மதுரையில் இன்று நடக்கிறது தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு.... அரசியல், சமூக பிரச்சினைகள் குறித்து விஜய் பேசுவார் என தொண்டர்கள் எதிர்பார்ப்பு..
2. மதுரை மாநாட்டில் பங்கேற்க நள்ளிரவு முதல் திரளாக குவியும் தவெக தொண்டர்கள்.... பொழுது போக்கிற்காக பாடல்களை இசைத்து நடனமாடி உற்சாகம்....
3. மதுரை தவெக மாநாட்டு மேடையில் இருந்த அண்ணா, எம்.ஜி.ஆர். படங்கள் திடீரென மாற்றம்.... எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு....
4. மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டுக்காக பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு... பருந்து பார்வையில் புதிய தலைமுறையின் பிரத்யேக காட்சிகள்....
5. தவெக மாநாட்டுக்கு போதிய இருக்கைகள் கிடைக்காததால், விஜயின் ராம்ப் வாக் நடக்கும் இடம் வரை மட்டுமே நாற்காலிகள்...
6. தவெக மருத்துவக் குழு சார்பில் 40 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்திவைப்பு... மதுரை தவெக மாநாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட பவுன்சர்கள் நியமனம்....
7. மாநாட்டிற்கு வரும் பெண்களுக்கான உதவிகளை செய்யும் தவெக தலைமை சிறப்பு ஏற்பாடு....
8. தவெக மாநாட்டு மேடைக்கு அருகிலேயே சிறிய கொடிகம்பம் அமைப்பு... 100 அடி கொடி கம்பம் விழுந்த நிலையில் புதிய ஏற்பாடு...
9. மதுரை மாநாட்டில் பங்கேற்போருக்கு சான்றிதழ் வழங்க தவெக தலைமை சிறப்பு ஏற்பாடு.... மாநாடு நடைபெறும் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள QR-CODE மூலம் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு....
10. தவெக மாநாட்டையொட்டி மதுரையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம்.... மதுரை வழியாக பயணிக்கும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தல்....
11. மதுரை தவெக மாநாட்டுத் திடல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்... உயர் நீதிமன்ற கிளை உத்தரவை அடுத்து காவல் துறை பாதுகாப்புடன் நடவடிக்கை...
12. துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்கிறார் சுதர்சன் ரெட்டி.... இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், மூத்தத் தலைவர்கள் பங்கேற்பார்கள் என தகவல்....
13. சாமானியர்களின் வாக்குரிமை பறிக்கப்படும் விவகாரத்தில் ஜனநாயகம் எங்கே இருக்கிறது?... பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து சுதர்சன் ரெட்டி கேள்வி....
13. சர்வதேச தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் லண்டன் மற்றும் ஜெர்மனி பயணம்... ஆகஸ்ட் 30ஆம் தேதி புறப்பட்டு செப்டம்பர் 8ஆம் தேதி நாடு திரும்புவார் எனத் தகவல்...
14. 2021இல் இருந்து தற்போது வரை 77 சதவீத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன... ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்க்க திட்டங்கள் உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி. ஆர்.பி.ராஜா பேட்டி...
15. எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்... குரல் வாக்கெடுப்பு மூலம் விவாதமின்றி நிறைவேறிய மசோதா....
16. பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல்... தீவிர குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி பறிபோகும்.. பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா, அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு...
17. நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பிவைப்பு.... முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு... இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சி என கண்டனம்...
18. திமுக ஆட்சியில் அனைத்து பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்வு.... சோழிங்கர் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டு....
19. அரசமைப்பு சட்டங்கள் சரியாக இருக்கின்றன.. அவற்றை செயல்படுத்துவதில்தான் சிக்கல் உள்ளது... “ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் டெட்” என்று ஆளுநர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு கருத்து...
20. துரை வைகோ மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என வைகோவுக்கு மல்லை சத்யா கேள்வி... மதிமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில் புதிய தலைமுறைக்கு பேட்டி... நேரில் சந்திக்க விருப்பமில்லை; கொடுக்கப்பட்ட கடிதத்திற்கு விளக்கத்தை மட்டும் அளித்தால் போதும்.... மல்லை சத்யா பெயரை குறிப்பிடாமல் மதிமுக பொதுக் கூட்டத்தில் வைகோ பேச்சு....
21. மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் ஆக்ரோஷமான தன்மை கொண்ட நாய்களை வளர்க்கக்கூடாது... ஜாபர்கான்பேட்டையில் வளர்ப்பு நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த நிலையில் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை...
22. கூலி திரைப்படத்தை யுஏ சான்றிதழுடன் திரையிட அனுமதி கோரிய மனு... சென்சார் போர்டு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...
23. அரசியலுக்கு வருகிறாரா நடிகர் சூர்யா... சட்டமன்றத் தேர்தலில் சூர்யா களமிறங்கப் போவதாக வந்த தகவல் போலியானது என ரசிகர் மன்றம் விளக்கம்....
24. நடிகர் ரவி மோகனுக்கு எதிராக மனு தாக்கல் செய்ய படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி... நீதிமன்ற உத்தரவுப்படி 5 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு சொத்து உத்தரவாதம் தாக்கல் செய்யாததால் சிக்கல்...
25. அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட அக்னி 5 ஏவுகனைச் சோதனை வெற்றி.... 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து இலக்கை தாக்கும் ஆற்றல் கொண்டது என டி.ஆர்.டி.ஓ. தகவல்....
26. உடல்நலம் பாதிக்கப்பட்ட தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.... மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நவீன் பட்நாயக் பதிவு....
27. காசாவில் ஹமாஸ் படையினர் பதுங்கு குழிகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம்.... தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியீடு....
28. வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா கோலாகலம்... பாரம்பரிய பறை முழங்க வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் சப்பரத்தில் வீதியுலா