ரஷ்யாவிற்கு அருகே 2 அணுஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு. அணு ஆயுதம் குறித்த ரஷ்ய தலைவரின் பேச்சை தொடர்ந்து அதிரடி.
சுதந்திர தின கொண்டாட்டத்தில் என்ன பேச வேண்டும்? என நாட்டு மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமர் நரேந்திர மோடி.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகான பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு. இறந்தவர்கள், மாநிலத்தை விட்டு வெளியேறியவர்கள் என 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம்.
பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி. தேர்தல் ஆணையம் வாக்குகளை திருடுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. தமிழகம் முழுவதும் 1256 மருத்துவ முகாம்கள் நடத்த அரசு திட்டம்..
தமிழக அரசு திட்டங்களில் முதல்வர் பெயர் பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி. தற்போதைய பெயரிலேயே செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என அரசுத் தரப்பில் மனுத் தாக்கல்.
50 மாத திமுக ஆட்சியில் தமிழக மக்கள் நலமுடன் இல்லை.. நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சனம்.
அதிமுக, பாஜக இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படும். கோவில்பட்டியில் பழனிசாமியின் பரப்புரையில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு.
பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட்17ஆம் தேதி நடைபெறும் என நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு. தந்தைக்கு போட்டியாக வரும் 9ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார் அன்புமணி.
சென்னையில் காவல் வாகனத்தில் போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரம். வீடியோ வைரலான நிலையில், ரவுடிகள் 4 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படும் அதிகபடியான காவிரி உபரிநீர்.. சீர்காழி அருகே மண் அரிப்பால் திட்டு கிராமங்கள் பாதிப்பு.
காவிரி படுகை மாவட்டங்களுக்கு இன்றும் கனமழை எச்சரிக்கை. சிவகங்கை, புதுக்கோட்டையில் இடியுடன் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது.
ஆடி மாத 3ஆவது வெள்ளிக்கிழமை ஒட்டி களைகட்டிய அம்மன் கோயில்கள். அலகு குத்தி கிரேனில் தொங்கியபடி ஊர்வலமாக வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.
71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு. சிறந்த தமிழ் படம், சிறந்த திரைக்கதை உள்பட 3 விருதுகளை தட்டிச் சென்றது பார்க்கிங் திரைப்படம்.
சிறந்த துணை நடிகராக எம்.எஸ். பாஸ்கர், சிறந்த துணை நடிகையாக ஊர்வசி தேர்வு. வாத்தி படத்திற்காக சிறந்த பாடல் இசையமைப்பாளர் விருதுக்கு தேர்வானார் ஜிவி பிரகாஷ்..
சிறந்த நடிகருக்கான விருதுக்கு ஜவான் படத்திற்காக ஷாருக்கான் தேர்வு. 12th FAIL படத்தில் நடித்த விக்ராந்த் மாஸேவும் சிறந்த நடிகர் விருதை தட்டிச்சென்றார்.
2023ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக 12th FAIL அறிவிப்பு.. சிறந்த தெலுங்கு படமாக தேர்வு செய்யப்பட்டது பஹவந்த் கேசரி.
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம். இந்திய சினிமாவின் பெருமைமிக்க பாரம்பரியத்தை, நடுவர் குழு அவமானப்படுத்திவிட்டதாகவும் குற்றச்சாட்டு.
இங்கிலாந்து உடனான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 52 ரன்கள் முன்னிலை. 2ஆவது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள், ஜெய்ஸ்வால் அரைசதம்.