தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. காலை 8 மணி முதல் IRCTC இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.
வாக்குத் திருட்டு புகார் கூறிய ராகுல் காந்தி ஆதாரத்தை அளிக்காவிட்டால் மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் நீர்ச்சத்து குறைப்பாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் மலிவான அரசியல் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பொதுக்கூட்ட மேடையில் செய்தியாளர்களை நோக்கி அடிக்க பாய்ந்து வந்த சீமானால் பதற்றம் ஏற்பட்டது.
பாமக தலைவராக ராமதாஸ் செயல்படுவார் என கட்சி விதிகளில் திருத்தம் செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில், மூன்றே நாளில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட திருமாவளவன் பேசிய கருத்தால் சமூக வலைதளங்களில் பயனர்கள் விமர்சித்தனர்.
தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26ஆவது மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தவெக மாநாட்டிற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், வித்தியாசமான முறையில் கிடாய் வெட்டி வழிபாடு நடத்தி விருந்து வைத்தார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.