* நாட்டின் 79ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாட்டப்படும் நிலையில், டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுகிறார் பிரதமர் மோடி
* சென்னையில் கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக் கொடி ஏற்றுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பெருநகர் முழுவதும் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
* சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை. 2047ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா உருவெடுக்கும் என நம்பிக்கை.
* தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர் என் ரவி குற்றச்சாட்டு... சுதந்திர தின வாழ்த்துக் குறிப்பில் தமிழக அரசு மீது விமர்சனம்...
* ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பு... சுதந்திர தின வாழ்த்து குறிப்பில் தமிழக அரசை ஆளுநர் விமர்சித்த நிலையில் அறிவிப்பு...
* ஆர்.எஸ்.எஸ். மனநிலையுடன் அரசுப் பள்ளிகள் மீது ஆளுநர் அவதூறு பரப்புவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்துள்ளார். அதேபோல ஆர்.என்.ரவி அறிக்கையை படித்தால் அமித் ஷாவே சிரிப்பார் என அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம் செய்துள்ளார்.
* அமைச்சர் துரைமுருகனை பார்ப்பதற்கு பரிதாபமாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேச்சு... எந்த தியாகமும் செய்யாத உதயநிதி துணை முதல்வராக இருப்பதாகவும் சாடல்...
* தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்களால் சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்... கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தென்மாவட்டங்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் பரிதவித்த பயணிகள்...
* தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை உடனடியாக விடுவிக்க சென்னை நீதிமன்றம் உத்தரவு. சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன எனவும் காவல் துறைக்கு கேள்வி.
* தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் விடுவிப்பு.... வழக்கறிஞர் பாரதி உள்ளிட்ட 800க்கும் மேற்பட்டோர் மீது காவல் துறை வழக்குப்பதிவு..
* திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் களைகட்டும் ஆவணி திருவிழா... பெலிநாயகர் அஸ்திரதேவருடன் பல்லக்கில் வீதி உலா...
* தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு... சென்னையின் ஒருசில பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்...
* டெல்லியில் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... கனமழையால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு...
* காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46ஆக அதிகரிப்பு... 167 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 38 பேரின் நிலைமை கவலைக்கிடம்...
* ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் திட்டம் நாடு முழுவதும் அமல்.. 3 ஆயிரம் ரூபாய் கட்டினால், பயனர்கள் 200 முறை சுங்கச்சாவடியை கடக்கலாம்..
* ட்ரம்ப் - புடின், அலாஸ்காவில் இன்று சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை.. இந்தியா மீதான வரிவிதிப்பு நடவடிக்கைதான், புடின் உடனான பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்ததாக ட்ரம்ப் பேட்டி...
* போர்ச்சுகல், கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பற்றி எரியும் காட்டுத்தீ... தண்ணீரை ஊற்றியும், விமானங்கள் மூலமாக ரசாயன திரவங்களை தூவியும் தீயை அணைக்க பெரும் போராட்டம்..