ராமதாஸ், சுரேஷ் ரெய்னா எக்ஸ் தளம்
இந்தியா

HEADLINES |ECIக்கு ராமதாஸ் கடிதம் முதல் சுரேஷ் ரெய்னாவுக்கு சம்மன் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம் முதல் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத் துறை சம்மன் வரை விவரிக்கிறது.

PT WEB
  • பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பான 5 கோடி வாக்காளர்களை நீக்கினால், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  • தமிழகத்தில் திமுக ஆட்சியில் 204 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

  • மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கு தொடர்பாக மேயரின் கணவர், உதவி ஆணையர் ஆகியோர் அதிரடியாய் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள்து.

  • அன்புமணி கூட்டிய பாமக பொதுக்குழு செல்லாது என தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

ராமதாஸ், சுரேஷ் ரெய்னா
  • தமிழக அரசு தொடங்கியுள்ள முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கிடைத்த வெற்றி என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

  • அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனும் விரைவில் ஒரே மேடையில் தோன்றுவார்கள் என பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

  • தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  • சென்னை அடுத்த மகாபலிபுரத்தில்10 நாட்கள் களைகட்டிய ஆசிய அலைச்சறுக்கு போட்டி நிறைவுபெற்றது. வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

  • திருமணத்தை மீறிய உறவுக்காக 2 குழந்தைகளை கொன்ற அபிராமியின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.