பரத், ராகுல், டி.கே.சிவக்குமார் எக்ஸ் தளம்
இந்தியா

HEADLINES | கொட்டும் மழையில் தூய்மைப் பணியாளர் போராட்டம் முதல் ராகுலுக்கு நோட்டீஸ் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட பரத் முதல், ராகுல் காந்திக்கு கர்நாடக தலைமைத் தேர்தல் ஆணையர் நோட்டீஸ் அனுப்பியது வரை விவரிக்கிறது.

Prakash J
  • சென்னையில் கொட்டும் மழையிலும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். 7ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

  • சிவகங்கையில் நடந்த 3 கொலைகளை கண்டும் காணாமல் இருப்பதாக திமுக அரசுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

  • 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன் என பாமக மகளிர் மாநாட்டில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சூளுரைத்துள்ளார்.

  • சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில், பரத் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது, ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

  • பெங்களூருவுக்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு புறக்கணிப்பதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பரத், ராகுல், டி.கே.சிவக்குமார்
  • வாக்குத் திருட்டு புகார் கூறியிருந்த ராகுல் காந்திக்கு கர்நாடக தலைமைத் தேர்தல் ஆணையர் நோட்டீஸ் அனுப்பி, ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தியுள்ளார்.

  • குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • பீகாரில் உள்ள பிரபல ஆன்லைன் வகுப்பு ஆசிரியரான கான் சாருக்கு, 15000 மாணவிகள் ராக்கி கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • அமெரிக்க வரிகள் விவகாரத்தில் இன்று நாடாளுமன்ற வெளியுறவு குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அரசின் நிலைப்பாடு, வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதம் நடத்தப்பட இருக்கிறது.

  • விண்வெளியில் மனிதர்கள் நீண்டகாலம் தங்கியிருக்கும் போது ஏற்படும் மூளை மற்றும் உடல் திசு பாதிப்புகள் குறித்து சீன விண்வெளி நிலையத்தில் உள்ள விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.