இந்தியா

சாதி ,மொழி, வரலாறு மூலம் நாட்டில் பிரிவினையை உண்டாக்க முயற்சிகள் நடக்கிறது - பிரதமர் மோடி

webteam

"சாதி ,மொழி, வரலாறு " உள்ளிட்டவற்றின் மூலம் நாட்டில் பிரிவினையை உண்டாக்க முயற்சிகள் நடக்கிறது. எனவே விழிப்புடன் இருங்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

குஜராத் தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் தேசிய ஒற்றுமை தின தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றினார் பிரதமர் மோடி.


அந் நிகழ்ச்சியில் , ‘சாதி , மொழி , வரலாறு மூலம் நாட்டில் பிரிவினையை உண்டாக்க முயற்சிகள் நடந்து வருகிறது. எனவே அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். மோர்பில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கேவாடியாவில் நான் இருந்தாலும் மோர்பில் நடந்த பாதிக்கப்பட்டவர்களுடன் தமது இதயம் இணைந்து இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமை கொள்ளும் சக்திகள் இன்னும் உள்ளது.  


ஒற்றுமை தின விழாவில் சர்தார் ஒப்படைத்த பொறுப்பை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். தேசத்தின் ஒற்றுமையை வலுப்படுத்துவது குடிமக்களை பொறுப்பு. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புணர்வுடன் கடமைகளை செய்ய தயாராக இருந்தால் மட்டுமே இது நடக்கும்.

ஒவ்வொருவருக்கும் அரசின் கொள்கையில் சென்றடைந்து வருகிறது. குஜராத்தின் சூரத்தில் உள்ள மக்களை போலவே அருணாச்சல் பிரதேச மக்களுக்கும் இலவச தடுப்பூசிகள் எளிதாக கிடைக்கின்றன. எய்ம்ஸ் போன்ற மருத்துவர் நிறுவனங்களை கோரக்பூர் மட்டுமல்லாமல் பிலாஸ்பூர் ,தர்மங்கா ராஜ்கோட் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் காணலாம். தமிழகம் மட்டுமின்றி உத்தரபிரதேசத்திலும் பாதுகாப்பு வழித்தடங்கள் மேம்பாட்டு பணிகள் முழு வீட்டில் நடைபெற்று வருகிறது.வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு மொழிகள் பேசப்பட்டாலும் வரிசையில் நிற்கும் கடைசி நபரை இணைக்கும் பொழுது அரசின் திட்டங்கள் இந்தியாவில் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைகின்றன’’ என கூறினார் பிரதமர் மோடி.