இந்தியா

"ஜம்மு காஷ்மீரில் பலவந்தத்தை பயன்படுத்தி ஆள முயற்சி" - மெஹ்பூபா முஃப்தி

Veeramani

ஜம்மு காஷ்மீர் மக்களை பலவந்தத்தின் மூலம் மத்திய அரசு ஆள விரும்புவதாக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹ்பூபா முஃப்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் வேலை தேடுபவர்கள், நிலம் வாங்க விரும்புவோர் போன்றோரிடம் ஆவணங்களை கொண்டு வருமாறு வற்புறுத்தி மக்களின் வாழ்க்கையை கடினமாக்கி வருவதாக அவர் சாடியுள்ளார். 370ஆவது பிரிவை நீக்கிய பின்னர் கூறிய உறுதிமொழிக்கு மாறாக மத்திய அரசு செயல்படுகிறது என மெஹ்பூபா விமர்சித்தார். யூனியன் பிரதேச ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற விரும்பினால் கட்டாய விழிப்புணர்வு அனுமதி பெற வேண்டும் என்று வற்புறுத்தப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.