இந்தியா

"சப்பாத்தி....நூடுல்ஸ்...சான்விச்...." - தீவிரவாதிகளா? டூரிஸ்ட்டுகளா..?

webteam

காஷ்மீரில் பாதுகாப்பு படை முகாம்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். 

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று இரவு பாதுகாப்புப் படை முகாம்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் துணை ராணுவப் படையை சேர்ந்த இரு வீரர்கள் காயமடைந்தனர். புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதியில் உள்ள பாதுகாப்புப் படையின் 180வது படைப்பிரிவு முகாம் மீது ஏவுகணை குண்டுகளை பயன்படுத்தி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் முகாம்களில் பல இடங்கள் சேதமடைந்தன. இந்நிலையில் பூஞ்ச் மாவட்டத்தில் தேசிய எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுறுவல் முயற்சியை இந்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் முறியடித்தனர். அவர்களின் கைப்பை மற்றும் பொருட்களை சோதனை செய்ததில் அவர்களிடம் அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேசமயம் அவர்களின் பையில் ஆயுதங்களை விட தங்களின் பசியை போக்கும் உணவு பொருட்களேயே தீவிரவாதிகள் அதிகளவில் வைத்திருந்தனர். சப்பாத்தி, நூடுல்ஸ், சாக்லெட்டுகள், ஆரஞ்சு ஜூஸ் உள்ளிட்ட பல திண்பண்டங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வந்தார்களா? அல்லது பிக்னிக் வந்தார்களா? என்று இதனைக்கண்டு ராணுவத்தினரே ஒரு நிமிடம் திகைத்தனர்.