இந்தியா

எருமை மாடுகளை ஏற்றிச் சென்றவர்கள் மீது கொடூர தாக்குதல்

எருமை மாடுகளை ஏற்றிச் சென்றவர்கள் மீது கொடூர தாக்குதல்

webteam

டெல்லி அருகே எருமை மாடுகளை வாகனங்களில் ஏற்றி சென்றவர்கள் மீது ஒரு கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியை அடுத்த பாபா ஹரிதாஸ் நகர் பகுதியில் நேற்று 80 எருமை மாடுகளை லாரிகளில் ஏற்றிக் கொண்டு சென்றபோது வழியில் இடைமறித்த ஒரு கும்பல், மாடுகளை லாரிகளில் இருந்து வெளியே அவிழ்த்துவிட்டு, வாகனங்களில் இருந்தவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில் வாகனங்களில் இருந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாடுகளை ஏற்றி செல்ல தங்களிடம் உரிய ஆவணங்கள் இருந்ததாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். தாக்குதலில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.