இந்தியா

வாஜ்பாய் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

வாஜ்பாய் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

webteam

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை நன்கு தேறி வருவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துமனை தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், கடந்த திங்கட்கிழமை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாதாரண மருத்துவ பரிசோதனைக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக முதலில் கூற‌ப்பட்டது. இந்நிலையில் வாஜ்பாய்க்கு சிறுநீரக பாதையில் நோய் தொற்று உள்ளதாகவும், சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து டெல்லி ‌எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொடர் சிகிச்சைகள் காரணமாக வாஜ்பாயின் உடல்நிலை நன்கு தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம், இதய துடிப்பு, சிறுநீர் வெளியேற்றம் ஆகியவை இயல்பு நிலையில் உள்ளதாகவும், வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.